2-ம் நிலை காவலர் தேர்வை 5,355 பேர் எழுதினர்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று நடந்த 2-ம்நிலை காவலர் பணிக்கான எழுத்து தேர்வை 5,355 பேர் எழுதினர். 974 பேர் பங்கேற்கவில்லை.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று நடந்த 2-ம்நிலை காவலர் பணிக்கான எழுத்து தேர்வை 5,355 பேர் எழுதினர். 974 பேர் பங்கேற்கவில்லை.
5,355 பேர் எழுதினர்
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பாளர், சிறை காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நேற்று நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் 5 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடபெற்றது.
இதில் ஆண்கள்- 5,217 பேர், பெண்கள் 1,111 பேர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 6,329 நபர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். நேற்று நடந்த தேர்வில் 5,355 பேர் தேர்வு எழுதினர். 974 பேர் பங்கேற்கவில்லை.
போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
தேர்வர்கள் காலை முதலே ஆர்வமாத தேர்வு மையங்களுக்கு வரத்தொடங்கினர். அவர்கள் தீவிர சோதனைக்கு பிறகு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் தேர்வு நடைபெற்ற மையங்களுக்கு சென்று பாதுகாப்பு பணிகள் மற்றும் எழுத்து தேர்வு அறைகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு நியமிக்கப்பட்டிருந்த காவல் அதிகாரிகளிடம் பாதுகாப்பு குறித்து அறிவுரைகளை வழங்கினார்.