உலகில் தமிழினம் வாழும் வரை சி.பா.ஆதித்தனாரின் புகழும், பெருமைகளும் பேசப்படும் - டாக்டர் ராமதாஸ்
உலகில் தமிழினம் வாழும் வரை சி.பா.ஆதித்தனாரின் புகழும், பெருமைகளும் பேசப்படும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தினந்தந்தி நிறுவனர் தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் 41-வது நினைவு நாள் இன்று. நாம் தமிழர்கள் என்ற உணர்வுடன் தமிழர்கள் முன்னேறவும், தமிழினம் தலை நிமிரவும் பாடுபட்டவர். இந்த உலகில் தமிழினம் வாழும் வரை சி.பா. ஆதித்தனாரின் புகழும், பெருமைகளும் பேசப்படும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.