பஞ்சலிங்க அருவிக்கு நீர்வரத்து அதிகரிக்குமா?

Update: 2022-06-19 15:57 GMT


உடுமலையை அடுத்த மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஒரே குன்றில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய கடவுள்கள் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். அது தவிர சப்தகன்னிகள், விநாயகர், சுப்பிரமணியர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட கடவுள்கள் அருள்பாலித்து வருகின்றனர். கோவிலில் கிருத்திகை, பிரதோஷம், அமாவாசை, சிவராத்திரி, பவுர்ணமி, நவக்கிரக பெயற்சி உள்ளிட்ட நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்ளவும் பஞ்சலிங்க அருவியில் குளித்து புத்துணர்வு பெறவும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்திமலைக்கு வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் கோடை வெப்பத்தின் தாக்குதல் காரணமாக வனப்பகுதி பொழிவு இழந்து காணப்படுவதுடன் அங்கு உற்பத்தியாகின்ற ஆறுகளும் நீர்வரத்தை இழந்து விட்டன. அந்த வகையில் பஞ்சலிங்க அருவியில் நீராதாரங்களிலும் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.இந்த சூழலில் கடந்த 2 நாட்களாக அருவியின் நீராதாரங்களில் ஒன்றான குளிப்பட்டி வனப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் அருவிக்கு நீர்வரத்து ஏற்படும் சூழல் உருவானது. அதைத்தொடர்ந்து பக்தர்களின் பாதுகாப்பு கருதி அருவிக்கு செல்வதற்கு அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு சற்று முன்பே மாலை வேளையில் தடை விதிக்கப்பட்டது. இதனால் திருமூர்த்திமலைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்த அளவே காணப்பட்டது.அருவியின் நீராதாரங்களில் மழை பெய்ததால் நீர்வரத்து அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது. கோவில் நிர்வாகத்தின் சார்பில் அருவிக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்