அருப்புக்கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் தேரோட்டம்

அருப்புக்கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் தேரோட்டம்

Update: 2023-04-20 18:40 GMT

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் தேரோட்டத்தை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.

பொங்கல் திருவிழா

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புளியம்பட்டியில் ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

ஆயிரங்கண் மாரியம்மன் தேர் வீதி உலா புளியம்பட்டியில் உள்ள கோவிலில் இருந்து தொடங்கி விருதுநகர் ரோடு, பெரிய புளியம்பட்டி காந்தி மைதானம், வேலாயுதபுரம் உள்ளிட்ட தேரோடும் வீதிகள் வழியாக மீண்டும் கோவிலில் சென்று நிறைவுற்றது.

தேரோட்டம்

முன்னதாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தேரை வடம் பிடித்து ெதாடங்கி வைத்தார்.

தேரில் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளிய ஆயிரங்கண் மாரியம்மனை வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வழிபட்டு மகிழ்ந்தனர்.

இந்த தேரோட்டம் வீதி உலா நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்