கலை பண்பாட்டு திருவிழா போட்டிகள்

விழுப்புரத்தில் கலை பண்பாட்டு திருவிழா போட்டிகள் நடந்தது.

Update: 2022-11-04 18:45 GMT

விழுப்புரம்;

விழுப்புரம் மாவட்ட பள்ளி கல்வித்துறை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் மாணவ- மாணவிகளின் தனித்திறனை மதிப்பிடுவதற்கான கலை பண்பாட்டு திருவிழா போட்டிகள் விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில் விழுப்புரம், திண்டிவனம் ஆகிய கல்வி மாவட்டங்களை சேர்ந்த 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் வாய்ப்பாட்டு, இசை, நடனம், பாரம்பரிய நாட்டுப்புற இசை உள்ளிட்ட 10 வகையான போட்டிகள் நடைபெற்றன.

இப்போட்டியை மாவட்ட கல்வி அலுவலர்கள் கிருஷ்ணன், செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைத்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் தனவேல் முன்னிலை வகித்தார். இப்போட்டிக்கு விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சசிகலா, முனைவர் கோவிந்தன் ஆகியோர் பொறுப்பாளராக இருந்தனர். போட்டியை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராமன், அருண், பிரகாஷ், கணபதி, ஜெயச்சந்திரன், தமிழழகன், பொறியாளர் ஆனந்தபாபு, கலையரசி, பழனியம்மாள் ஆகியோர் மேற்பார்வையிட்டனர். முடிவில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வி நன்றி கூறினார். மேலும் இப்போட்டிகளில் கலந்துகொண்ட மாணவ- மாணவிகளில் 20 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வருகிற 15-ந் தேதி நாமக்கல்லில் நடக்கும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்