கலைத்துறையில் சிறந்து விளங்கும் சிறுவர்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் 5 வயது முதல் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு மாவட்ட, மாநில அளவிலான கலைப்போட்டிகளை தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் நடத்த அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி குரலிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம், மற்றும் ஓவியம் ஆகிய 4 பிரிவுகளின்கீழ் மாவட்ட அளவிலான போட்டிகள் வரும் 17-ந்தேதி ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது. இந்த மாவட்ட போட்டியில் முதலிடம் பெறும் சிறுவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு கலை பண்பாட்டுத்துறையின் மதுரை மண்டல அலுவலகத்தை 0452-2566420, 9842596563, 9443207376 எண்களில் தொடர்பு கொள்ளலாம். இந்த வாய்ப்பை கலைத்திறன் மிக்க சிறுவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று ராமநாதபுரம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.