செயற்கை மணல் தயாரித்தது கண்டுபிடிப்பு

செயற்கை மணல் தயாரித்தது கண்டுபிடிக்கப்பட்டு, தொட்டி அகற்றப்பட்டது.

Update: 2022-09-16 18:45 GMT

ஜோலார்பேட்டையை அடுத்த ரெட்டியூர் அருகே காந்திநகர் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், தொட்டி அமைத்து அதில் செயற்கை மணல் தயாரிப்பதாக ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர் சப்- இன்ஸ்பெக்டர் காதர்கான் மற்றும் போலீசாருடன் சம்பவம் இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அங்கு தொட்டி அமைத்து அதன் மூலம் செயற்கை மணல் தயாரித்து வந்தது தெரிந்து. இதனையடுத்து போலீசார் உடனடியாக பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து செயற்கை மணல் தயாரிக்கும் தொட்டியை உடைத்து அகற்றினர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை வருவாய் ஆய்வாளர் ரவிமாராஜன், பொன்னேரி கிராம நிர்வாக அலுவலர் சங்கீதா ஆகியோர் சம்பவம் இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர்.

விசாரணையில் கூத்தாண்ட குப்பம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவர் செயற்கை மணல் தயாரித்து அப்பகுதியில் பல்வேறு பகுதிகளுக்கு வினியோகம் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஏழுமலையை தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்