அரசு பள்ளிகளுக்கு இடையிலான கலைத்திருவிழா போட்டிகள்
அரசு பள்ளிகளுக்கு இடையிலான கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றது.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, கரூர் வட்டார வளமையத்திற்கு உட்பட்ட அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றது. முதல் நாள் நிகழ்ச்சியை கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் தொடங்கி வைத்தார். 2-ம்நாள் நிகழ்ச்சியை மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் தொடங்கி வைத்தார். இதில் மாணவர்கள் நுண்கலை, நடனம், வாய்ப்பாட்டு இசை, கருவி இசை, மொழித்திறன், நாடகம், நாட்டுப்புற கலை ஆகிய கலை போட்டிகளில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில், கரூர் மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் சுமதி, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மணிவண்ணன், உதவி திட்ட அலுவலர் சக்திவேல், கல்விக்குழு தலைவர் வசுமதி, கல்விக்குழு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.