பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கலைப்போட்டிகள்

தென்காசியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கலைப்போட்டிகள் நடந்தன.

Update: 2022-12-10 18:45 GMT

நெல்லை மண்டல கலை பண்பாட்டு துறை சார்பில் தென்காசியில் மாவட்ட அளவில் பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்படும் என மாவட்ட கலெக்டர் ஆகாஷ் அறிவித்து இருந்தார். அதன்படி தென்காசி மஞ்சம்மாள் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இடையே பல்வேறு வகையான கலைப்போட்டிகள் நடந்தன. 5 முதல் 8 வயது, 9 முதல் 12 வயது, 13 முதல் 16 வயது என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஓவியம், பரதம், பாட்டு, கிராமிய நடனம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

இந்த போட்டிகளில் தென்காசி பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் 400 பேர் கலந்து கொண்டனர். போட்டிகளில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 13 வயது முதல் 16 வயது வரை உள்ள பிரிவில் முதலிடம் பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கலை பண்பாட்டு துறை நெல்லை மண்டல உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் திட்ட இயக்குனர் கணேசன் செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்