கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் அம்பு போடும் நிகழ்ச்சி
கல்லங்குறிச்சியில் கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அரியலூர் அருகே உள்ள கல்லங்குறிச்சியில் புகழ்பெற்ற கலியுக வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. நவராத்திரி விழாவையொட்டி பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் கொலுவில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். கடைசி நாள் நிகழ்வான நரகாசுரன் மீது அம்பு போடும் நிகழ்ச்சி நடந்தது. கோவிலில் இருந்து பெருமாளை பல்லக்கில் வைத்து பக்தர்கள் தோளில் சுமந்து அருகே உள்ள மணக்குடி கிராமத்திற்கு சென்றனர். அங்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெருமாள் கையில் வில் அம்புடன் நான்கு வீதிகளில் உலா வந்தார். அதன்பின்னர் நரகாசுரன் உருவில் உள்ள வாழை மரத்தின் மீது பெருமாள் அம்பு விட்டு சாய்த்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.