போலீஸ் நிலையத்தில் தகராறு செய்த வாலிபர் கைது
செஞ்சி அருகே போலீஸ் நிலையத்தில் தகராறு செய்த வாலிபர் கைது
செஞ்சி
செஞ்சி அருகே உள்ள நல்லாண் பிள்ளை பெற்றாள் என்ற ஊரை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 32). இவரது மனைவி பரமேஸ்வரி(29). இவர் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த போது அவரை அதே ஊரை சேர்ந்த சுப்பிரமணி மகன் சிவா கட்டிப்பிடித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பரமேஸ்வரி சத்தம் போடவே சிவா அங்கிருந்து தப்பி ஓடி விட்டாா்.
இது குறித்து பரமேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் நல்லாண்பிள்ளை பெற்றாள் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சையது முகமது அலி வழக்குப்பதிவு செய்து சிவாவை கைது செய்து விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தார். அப்போது அங்கு சென்ற பரமேஸ்வரியின் கணவர் சுரேஷ் குடிபோதையில் சிவாவை அசிங்கமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதைப்பார்த்து அங்கு பணியில் இருந்த ஏட்டு புவனேஸ்வரன் சுரேஷை கண்டித்துள்ளார். ஆனால் அவர் தொடர்ந்து சிவாவை திட்டிக்கொண்டு போலீஸ் நிலையத்தில் இருந்தவர்களையும் பணி செய்ய விடாமல் தகராறு செய்ததாக தெரிகிறது. இது குறித்து ஏட்டு புவனேஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.