சாராயம் விற்றவா் குண்டர் சட்டத்தில் கைது

செய்யாறு அருகே சாராயம் விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-09 18:57 GMT

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா சித்தலப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் மணிகண்டன் (வயது 38). இவர், சாராயம் விற்ற போது கையும், களவுமாக செய்யாறு மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் கலையரசி தலைமையிலான போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

மணிகண்டன் தொடர்ந்து சட்டவிரோத செயலில் ஈடுபடுவதை தடுக்க குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் மணிகண்டனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பா.முருகேஷ் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அதற்கான நகலை வேலூர் ஜெயிலில் இருக்கும் மணிகண்டனிடம் போலீசார் வழங்கினர். 

Tags:    

மேலும் செய்திகள்