குரும்பூர் அருகே கொலை வழக்கில் கைதான 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

குரும்பூர் அருகே கொலை வழக்கில் கைதான 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Update: 2022-09-28 18:45 GMT

குரும்பூர் அருகே கொலை வழக்கில் கைதான 2 வாலிபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

கொலை வழக்கு

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே ஏ.கோபாலபுரம் பகுதியில் உள்ள கோவில் அருகே தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த மாடசாமி மகன் விக்னேஷ் (வயது 28) என்பவர் மதுபாட்டிலால் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தூத்துக்குடி 2-ம் கேட் முனியசாமி கோவில் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ராமலட்சுமணன் (24), தூத்துக்குடி பூபாலராயர்புரத்தை சேர்ந்த குருசாமி மகன் ராஜேஷ் (23) உள்பட 3 பேரை குரும்பூர் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து ராமலட்சுமணன், ராஜேஷ் ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார்.

குண்டர் சட்டம்

அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ராமலட்சுமணன், ராஜேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை குரும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராமகிருஷ்ணன் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினார். நடப்பு ஆண்டில் இதுவரை 211 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்