முதல்-அமைச்சர் வருகை குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டவர் கைது

முதல்-அமைச்சர் வருகை குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறாக பதிவிட்டவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-30 18:42 GMT

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கவும், நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் 2 நாள் பயணமாக வேலூருக்கு நாளை (புதன்கிழமை) வருகை தர உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் வருகை குறித்து அவதூறாக முகநூல், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேலூர் தொரப்பாடியை சேர்ந்த சிவசக்தி சேனா இந்து மக்கள் இயக்கத்தலைவர் ராஜகோபால் பதிவிட்டுள்ளார்.

இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த விருப்பாட்சிபுரம் பகுதி தி.மு.க. தகவல் தொழில்நுட்பப்பிரிவு துணை ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், முதல்-அமைச்சர் குறித்து அவதூறாக பதிவிட்டது பற்றி ராஜகோபாலிடம் கேட்டுள்ளார். அப்போது அவர் செந்தில்குமாரை தரக்குறைவாக திட்டி உள்ளார்.

இதையடுத்து செந்தில்குமார் பாகாயம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிந்து விசாரித்தார். அதில் ராஜகோபால் சமூகவலைதளங்களில் முதல்-அமைச்சர் குறித்து அவதூறாக பதிவிட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் நேற்று இரவு அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்