அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவர் கைது
அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவரை போலீசார் கைது செய்தனர்.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை ஒன்றியம் கங்கரக்கோட்டை ஊராட்சியை சேர்ந்த அன்பின் நகரம் கிராமத்தில் வீடுகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பதாக ஏழாயிரம்பண்ணை போலீசாருக்கு புகார் வந்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அன்பின் நகரத்தில் அலெக்ஸ் (வயது48) என்பவர் தனது வீட்டில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 20 கிலோ சோல்சாவெடிகள் மற்றும் மூலப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.