அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவர் கைது

அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-02-01 19:14 GMT

தாயில்பட்டி

வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பதை தடுக்க வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் வெற்றி முருகன், வேல்சாமி, ராமமூர்த்தி மற்றும் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது வெம்பக்கோட்டை கிழக்கு தெருவை சேர்ந்த சங்கையா (வயது 48) என்பவரின் வீட்டின் பின்புறம் தகர செட் அமைத்து பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த 50 கிலோ சோல்சா வெடிகள் மற்றும் மூலப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்ததுடன் சங்கையாவை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்