பெண்ணை அரிவாளால் வெட்டிய கணவர் கைது

திண்டுக்கல் அருகே பெண்ணை அரிவாளால் வெட்டிய கணவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-03-12 21:00 GMT

திண்டுக்கல் அருகே உள்ள சின்ன பள்ளப்பட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 31). கூலித்தொழிலாளி. இவரது மனைவி மருதாயி (30). கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது ஆத்திரமடைந்த முத்துக்குமார், மருதாயியை அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த மருதாயியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்நாராயணன் வழக்குப்பதிந்து முத்துக்குமாரை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்