கோவில் திருவிழாவில் தகராறு;2 வாலிபர்கள் கைது
ராயக்கோட்டை அருகே கோவில் திருவிழாவில் தகராறு தொடர்பாக வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
ராயக்கோட்டை
ராயக்கோட்டை அருகே உள்ள பிள்ளாரிஅக்ரகாரம் கிராமத்தில் நாகம்மா கோவில் திருவிழா நடந்தது. இதில் சஜ்ஜலப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆனந்தன் (வயது 26), சிவன் (வயது 23) ஆகிய 2 பேரும் மது போதையில் பொதுமக்களிடம் தகராறு செய்தனர். இதுகுறித்து கோவில் நிர்வாகி ராமகிருஷ்ணன் ராயக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தன், சிவன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.