கண்டக்டரை தாக்கிய அண்ணன்-தம்பி கைது
காவேரிப்பட்டணம் அருகே கண்டக்டரை தாக்கிய அண்ணன்-தம்பி கைது செய்யப்பட்டனர்.
காவேரிப்பட்டணம்
காவேரிப்பட்டணம் அருகே உள்ள சின்னமுத்தூரை சேர்ந்தவர் சங்கர் (வயது 53). அரசு பஸ் கண்டக்டர். பனந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் திலகரசன் (24). சங்கரின் தந்தைக்கும், திலகரசனின் தந்தைக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இதுதொடர்பாக இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று சங்கர் சுண்டேகுப்பம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அவரை திலகரசன் தரப்பினர் வழிமறித்து பீர்பாட்டிலால் தாக்கினர். இதில் காயம் அடைந்த சங்கர் சிகிச்சைக்காக காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் திலகரசன், அவரது சகோதரர் நவீன்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.