கஞ்சா, மது விற்ற வடமாநில வாலிபர் கைது

சூளகிரி அருகே கஞ்சா, மது விற்ற வடமாநில வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-03 18:45 GMT

சூளகிரி

சூளகிரி அருகே உள்ள கொல்லப்பள்ளி பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகப்படும் வகையில் நின்ற வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரை சேர்ந்த முகமது அபுபக்கர் (வயது30) என்பதும், அந்த பகுதியில் தங்கி வேலை செய்து வந்த அவர், கஞ்சா மற்றும் மதுபாட்டில்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 250 கிராம் கஞ்சா மற்றும் 20 மதுபாட்டில்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்