பெண்ணை தாக்கிய விவசாயி கைது

கிருஷ்ணகிரியில் வழித்தட தகராறில் பெண்ணை தாக்கிய விவசாயி கைது செய்யப்பட்டார்.

Update: 2022-12-31 18:45 GMT

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை அருகே உள்ள பாறைகொட்டாயை சேர்ந்தவர் வெண்ணிலா (வயது 39). இதே பகுதியை சேர்ந்தவர் வரதராஜ் (45). விவசாயிகள். உறவினர்களான இவர்களுக்குள் வழித்தடம் தொடர்பாக தகராறு இருந்து வந்தது. நேற்று முன்தினமும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது வரதராஜ் வெண்ணிலாவை தாக்கினார். இதுகுறித்து வெண்ணிலா கொடுத்த புகாரின் பேரில் கே.ஆர்.பி. அணை போலீசார் வழக்குப்பதிவு செய்து வரதராஜை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்