கஞ்சா, குட்கா விற்ற 3 பேர் கைது

கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை பகுதியில் கஞ்சா, குட்கா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-12-21 18:45 GMT

கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை பகுதியில் கஞ்சா, குட்கா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வாகன சோதனை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா கடத்தலை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். மேலும் மளிகை, பெட்டிக்கடைகளிலும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

போலீசார் ரோந்து சென்றபோது கஞ்சா விற்றதாக பாஞ்சாலியூரை சேர்ந்த விஜய் (வயது 20), கலுகொண்டப்பள்ளி எல்லப்பா (60) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

குட்கா விற்பனை

ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணை பஸ் நிறுத்தம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அங்குள்ள கடையில் அவர்கள் சோதனை செய்தனர். இதில் புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது. இதுதொடர்பாக கடைக்காரர் வெங்கடாசலம் (45) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடையில் விற்பனைக்கு வைத்திருந்த குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

குருவிநாயனப்பள்ளி சோதனைச்சாவடி அருகில் மதுவிலக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார்சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு தப்பி ஓடினர். இதையடுத்து அவர்கள் கொண்டு வந்த பையை சோதனை செய்தபோது ஒரு கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மோட்டார்சைக்கிள், கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்