கார், மோட்டார் சைக்கிள்களில் கஞ்சா கடத்திய 6 பேர் கைது

சாணார்பட்டி, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் கார், மோட்டார் சைக்கிள்களில் கஞ்சா கடத்திய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-12-03 16:40 GMT

சாணார்பட்டி, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் கார், மோட்டார் சைக்கிள்களில் கஞ்சா கடத்திய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

கஞ்சா கடத்தல்

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே வீரசின்னம்பட்டி சாலையில், சாணார்பட்டி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அடுத்தடுத்து 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் வந்தனர். அவர்களை போலீசார் நிறுத்தி விசாரணை நடத்தினர். மேலும் அவர்களது மோட்டார் சைக்கிள்களை சோதனை செய்தனர். அதில் 4 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது.

விசாரணையில் அவர்கள் திண்டுக்கல்லை அடுத்த பொன்மாந்துறை புதுப்பட்டியை சேர்ந்த முத்துக்குமார் (வயது 30), சாணார்பட்டியை சேர்ந்த காதர்மைதீன் (42), மூலச்சத்திரத்தை சேர்ந்த அஜீத்குமார் (47), பேகம்பூரை சேர்ந்த ஹக்கீம் (27) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சா, 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது

இதேபோல் ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை சாலையில் ஐ.ஜி. தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுபாண்டி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் காரில் வந்த 2 பேரிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் சத்திரப்பட்டியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (47), மூலச்சத்திரத்தை சேர்ந்த ஆரியராஜா (27) என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும், காருடன் ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில், தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமகிருஷ்ணன், ஆரியராஜா ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 1 கிலோ கஞ்சா, 2 செல்போன்கள், கார் பறிமுதல் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்