குட்கா கடத்தியவர் கைது

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்திற்கு குட்கா கடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-11-19 18:45 GMT

கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சின்னசாமி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்ற நபரை சோதனை செய்தனர். அதில் அவர் வைத்திருந்த பையில் 1½ கிலோ குட்கா இருப்பது தெரிந்தது. ேபாலீசார் நடத்திய விசாரணையில் அவர் கோவை பேரூர் சுண்டகாமுத்தூரை சேர்ந்த ராஜ்குமார் (வயது 38) என்பதும், கர்நாடகாவில் இருந்து பஸ்சில் குட்கா கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் குட்காவும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்