பெட்டிக்கடைகளில் குட்கா விற்ற 2 பேர் கைது
ஊத்தங்கரை பகுதியில் பெட்டிக்கடைகளில் குட்கா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை போலீசார் டவுன் பகுதியில் ரோந்து சென்றனர். அந்த பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் சோதனை செய்தனர். அப்போது கடையில் குட்கா விற்றது தெரிய வந்தது. இதுதொடர்பாக காமராஜ் நகரை சேர்ந்த ஷனாவுல்லா (வயது50) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அதேபோல கணக்கம்பட்டி பகுதியில் போலீசார் ரோந்து சென்ற போது பெட்டிக்கடையில் குட்கா விற்றது தெரிந்தது. இதுதொடர்பாக கடைக்காரர் கோவிந்தராஜ் (49) என்பவரை போலீசார் கைது செய்தனர். 2 கடைகளில் இருந்தும் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.