தலைமறைவான முதல் மனைவி கைது

தர்மபுரி அருகே விவசாயி கொலை வழக்கில் தலைமறைவான முதல் மனைவி கைது செய்யப்பட்டார்.

Update: 2022-11-01 18:45 GMT

தர்மபுரி அருகே உள்ள மாவடிப்பட்டி தெற்கத்தியான் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன் (வயது 52). விவசாயி. இவருக்கு 2 மனைவிகள். முனியப்பன் கடந்த மாதம் 18-ந்தேதி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக கிருஷ்ணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கூலிப்படையை ஏவி முனியப்பன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக கூலிப்படையை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக தேடப்பட்ட முனியப்பனின் மகன் திருமலை மற்றும் கூலிப்படையை சேர்ந்த பிரசாந்த் ஆகிய 2 பேர் கிருஷ்ணகிரி கோர்ட்டில் சரணடைந்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முனியப்பனின் முதல் மனைவி சந்திராவை நேற்று கிருஷ்ணாபுரம் போலீசார் கைது செய்தனர். விவசாயி கொலை தொடர்பாக அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோர்ட்டில் சரணடைந்த திருமலையை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்