கஞ்சா விற்ற 2 பேர் கைது

மொரப்பூர் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-10-31 18:45 GMT

மொரப்பூர்:

மொரப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகன், ஜெயக்குமார், பிரகாசம், சின்னசாமி, ஞானப்பிரகாசம் ஆகியோர் மொரப்பூர், அப்பியம்பட்டி, சிந்தல்பாடி பகுதியில் தீவிர ரோந்து சென்றனர். அப்போது சிந்தல்பாடி ரெயில்வே மேம்பால பகுதியில் நின்றிருந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் கடத்தூர் அருகே உள்ள வேடியூரை சேர்ந்த சிவன் (வயது 45), கடத்தூரை சேர்ந்த விஸ்வநாத் (21) என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்