மாரண்டஅள்ளியில் வெளிமாநில லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
மாரண்டஅள்ளியில் வெளிமாநில லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
மாரண்டஅள்ளி:
மாரண்டஅள்ளி பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக மாரண்டஅள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன் மகன் முனியப்பன் மற்றும் ராதாகிருஷ்ணன் மகன் பன்னீர்செல்வம் ஆகியோர் அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்த அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.