இருதரப்பினர் இடையே தகராறு; அண்ணன்-தம்பி கைது

கொடி கட்டியது தொடர்பாக இருதரப்பினர் இடையே தகராறில் அண்ணன்-தம்பி கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-09-02 17:21 GMT

தேன்கனிக்கோட்டை:

தளி அருகே உள்ள பெரிய மதகொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணப்பா (வயது 45). லாரி அதிபர். இவர் விநாயகர் சதுர்த்தியையொட்டி மதகொண்டப்பள்ளி பாரதி நகர் பகுதியில் உள்ள வீட்டின் முன்பு இந்து முன்னணி கொடியை கட்டினார். அதற்கு அதேபகுதியை சேர்ந்த அண்ணன், தம்பிகளான மகேஷ், மஞ்சுநாத் மற்றும் அவர்களது தாயார் ைஷலஜா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து கொடியை அகற்றினர்.

இதுதொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது மகேஷ் தரப்பினர் நாராயணப்பாவை தாக்கினர். இது தொடர்பாக இருதரப்பினரும் தளி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் மகேஷ், மஞ்சுநாத் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் நாராயணப்பா மற்றும் அவரது மகன் ராமமூர்த்தி ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்