செம்பட்டி அருகே கஞ்சா விற்ற 4 பேர் கைது
செம்பட்டி அருகே கஞ்சா விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
செம்பட்டியை அடுத்த, சித்தையன்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகே கஞ்சா விற்பனையில் சிலர் ஈடுபட்டு வருவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், செம்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான, தனிப்படை போலீசார், நேற்று அங்கு சென்றனர். அப்போது, போலீசார் வருவதை பார்த்த 4 இளைஞர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.
அவர்களை, விரட்டி மடக்கிப் பிடித்தனர். அவர்களிடமிருந்து ஒரு கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விசாரணையில், மேற்கு புதுபட்டியை சேர்ந்த கவுதம் (வயது 22), கூலம்பட்டியை சேர்ந்த அருண் (21), அதே ஊரை சேர்ந்த மற்றொரு அருண் (21), பிரவீன் (22) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.