கஞ்சா வைத்திருந்தவர் கைது
தேன்கனிக்கோட்டை அருகே கஞ்சா வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை போலீசார் தின்னூர் பகுதியில் ரோந்து சென்றனர். அந்த பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்ற ஒருவரை சோதனை செய்த போது அவர் 200 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது தின்னூரை சேர்ந்த பாபு என்கிற அசோக் (வயது36) என்பதும், கஞ்சா விற்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.