பிளஸ்-2 மாணவியை கடத்திய வாலிபர் கைது

இண்டூர் அருகே பிளஸ்-2 மாணவியை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-07-25 16:10 GMT

பாப்பாரப்பட்டி:

இண்டூர் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி அங்குள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து விட்டு வீட்டில் இருந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமானார். பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் (வயது 23) என்பவர் மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மாணவியின் தாயார் இண்டூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் வாலிபர் ஆனந்தை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்