பாலக்கோடு:
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பாறையூர் கிராமத்தில் கஞ்சா விற்பதாக தர்மபுரி மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுவிலக்கு தடுப்பு பிரிவு போலீசார் விரைந்து சென்று மாதேஷ் (வயது 47) என்பவரின் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதேசை கைது செய்தனர். மேலும் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.