ஆடு திருடிய 2 பேர் கைது

தேன்கனிக்கோட்டை அருகே ஆடு திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-06-25 16:22 GMT

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை அருகே இருதுக்கோட்டை சின்னாறு தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாதப்பா. இவருடைய மனைவி ஈஸ்வரி. இவருக்கு சொந்தமான ஆட்டை 2 பேர் திருடி சென்றனர். இது குறித்து ஈஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கோவைகுட்டை கிராமத்தை சேர்ந்த ருத்ரேஷ் (வயது 32), சிவபுரத்தை சேர்ந்த குமார் (22) ஆகிய 2 பேரும் ஆட்டை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆட்டை மீட்டு ஈஸ்வரியிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்