புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது
ஓசூரில் புகையிலை பொருட்கள் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
ஓசூர்:
ஓசூர் டவுன் போலீசார், பஸ் நிலையம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு புகையிலை பொருட்கள் விற்றதாக மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த சம்பத் (வயது 53) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.4,800, மதிப்புள்ள 12 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.