பெரியூர் பகுதியில் சாராயம் காய்ச்சியவர் கைது

பெரியூர் பகுதியில் சாராயம் காய்ச்சியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-15 16:47 GMT

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் பெரியூர் பகுதியில் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த மாது (வயது 55) என்பவர் சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அங்கிருந்த 5 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. 110 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்