ஓசூரில் ரியல் எஸ்டேட் அதிபருக்கு கொலை மிரட்டல் ரவுடி கைது

Update: 2023-07-26 19:45 GMT

ஓசூர்

ஓசூரில் ரியல் எஸ்டேட் அதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

கொலை மிரட்டல்

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள தொட்ட உப்பனூர் குருபரப்பள்ளியை சேர்ந்தவர் எதுபூஷன் ரெட்டி (வயது36). ரியல் எஸ்டேட் அதிபர். கடந்த 2022-ல் இவர் ஓசூர் காரப்பள்ளியை சேர்ந்த நாகா என்கிற நாகராஜ் (43) என்பவருக்கு மிரட்டல் விடுத்தார். அது தொடர்பாக ஓசூர் டவுன் போலீசில் வழக்கு உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் எதுபூஷன்ரெட்டியும், நாகாவும் வெவ்வேறு வழக்குகளில் கோர்ட்டில் ஆஜர் ஆவதற்காக ஓசூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்திற்கு வந்தனர். அப்போது, கோர்ட்டு அருகில் உள்ள ஒரு டீக்கடையில் அவர்கள் சந்தித்தனர். அப்போது எதுபூஷன்ரெட்டியை, நாகா ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தார்.

ரவுடி கைது

இதுகுறித்து எதுபூஷன்ரெட்டி கொடுத்த புகாரின் பேரில் நாகாவை ஓசூர் டவுன் போலீசார் கைது செய்தனர். ரவுடியான நாகா மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளன. மேலும் ரவுடி பட்டியலிலும் அவர் பெயர் உள்ளது குறிப்பிடத்தக்கது. கோர்ட்டு வந்தபோது ரியல் எஸ்டேட் அதிபருக்கு ரவுடி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்