கூடலூரில் சூதாடிய 6 பேர் கைது

கூடலூரில் சூதாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-07-18 21:00 GMT

கூடலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டியன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது புதிய பஸ் நிலையம் அருகே சிலர் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள், கூடலூரை சேர்ந்த மகேந்திரன் (வயது 64), அய்யப்பன் (27), தயாளன் (60), சிவா (33), கதிரேசன் (42), சுருளி (55) ஆகியோர் என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் 6 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.740 பறிமுதல் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்