சாட்சியம் அளிக்க ஆஜராகாத கரூர் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு-ஆலங்குடி நீதிமன்றம் உத்தரவு

சாட்சியம் அளிக்க ஆஜராகாத கரூர் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து ஆலங்குடி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

Update: 2022-07-22 19:08 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மழையூர் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு பஸ் மோதி ரவிச்சந்திரன் என்பவர் உயிரிழந்தார். இந்த வழக்கின் விசாரணை ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சாட்சியம் அளிக்க ஆஜராகும்படி அப்போதைய மழையூர் இன்ஸ்பெக்டரும், தற்போது கரூர் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் ராதாகிருஷ்ணன் என்பவருக்கு 10 முறை சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. ஆனால் அவர் சாட்சியம் அளிக்க கோர்ட்டில் ஆஜர் ஆகாததால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்