போர்மேன் கைது
தீப்பெட்டி ஆலையில் தீவிபத்து தொடர்பாக போன்மேனை கைது செய்தனர்.
தாயில்பட்டி,
தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த கட்டணஞ்செவல் தெருவில் கோபாலகிருஷ்ணன் (வயது50) என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலையில் நேற்று முன் தினம் கழிவு பொருட்கள் வைத்திருந்த அறையில் தீப்பிடித்தது. இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீசார், ஆலை உரிமையாளர் கோபாலகிருஷ்ணன், தாயில்பட்டியை சேர்ந்த போர்மேன் கதிரேசன் (40) ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து போர்மேன் கதிரேசனை கைது செய்தனர்.