நீடாமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவத்தன்று ரோந்து பணியில் இருந்தனர். அப்போது நீடாமங்கலம் அருகே பரப்பனாமேடு பகுதியில் மதுபாட்டில்கள் விற்பனை செய்த பாலையன் (60) என்பவரை பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்து 7 மதுபாட்டில்களையும் போலீசார் கைப்பற்றினர்.