நாமக்கல் மாவட்டத்தில் மது விற்ற பெண் உள்பட 6 பேர் கைது
நாமக்கல் மாவட்டத்தில் மது விற்ற பெண் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
பொத்தனூர் வெங்கமேடு பகுதியில் மதுபாட்டில்களை மறைத்து வைத்து சிலர் விற்பனை செய்து வருவதாக பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது வெங்கமேடு பகுதியில் மது விற்ற நெட்டையாம்பாளையம் சின்னாம்பள்ளி மேடு பகுதியை சேர்ந்த சரவணன் (வயது 47), பரமத்திவேலூர் கல்லூரி சாலையை சேர்ந்த மாரியப்பன் (56), பரமத்தி வேலூர் கந்தநகர் பேட்டை பகுதியை சேர்ந்த கனகராஜ் (61) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 35 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல் பரமத்தி அருகே உள்ள கீழ்சாத்தம்பூர், பெருமாபாளையம் பகுதியில் மஞ்சள் பையில் மறைத்து வைத்து மதுபாட்டில்கள் விற்ற நல்லூர் அருகே கொண்டரசம்பாளையத்தை சேர்ந்த வெங்கடாசலம் (31) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 9 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மோகனூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மது பதுக்கி விற்கபடுவதாக மோகனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இளையசூரியன் மற்றும் போலீசார் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது கீழ்பாலப்பட்டி பகுதியில் மது விற்ற ஜெயம்மாள் (வயது 57) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் மோகனூரில் மது விற்பனை செய்த தெற்கு தெருவை சேர்ந்த சிவக்குமார் (48) என்பவரை போலீசார் கைது செய்தனர்.