வீடுபுகுந்து நகை திருடிய 2 பேர் கைது

வீடுபுகுந்து நகை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

Update: 2023-06-11 18:45 GMT

காரைக்குடி நவரத்தினா நகர் வைடூரியம் வீதியை சேர்ந்தவர் காதர் பாத்திமா (வயது 43). இவரது கணவர் சாதிக்பாட்ஷா. துபாயில் வேலை பார்த்து வருகிறார். காதர் பாத்திமா பார்த்திபனூரில் தனது தாயாரை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றார். மீண்டும் வீடு திரும்பியபோது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த 21 பவுன் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியைவ திருடு போனது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த காதர் பாத்திமா இது தொடர்பாக காரைக்குடி அழகப்பாபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தை உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் பார்வையிட்டு விசாரணை நடத்தி கொள்ளையர்களை பிடிக்க 2 தனி படைகளை அமைத்தார். தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட வாணியங்குடியை சேர்ந்த ரஞ்சித் குமார் (25), கோவனூரை சேர்ந்த அழகர் என்ற அலெக்ஸ் (22) ஆகிய இருவரையும் கைது செய்து, நகைகளை மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்