தொப்பூர் அருகே மது விற்ற பெண்கள் உள்பட 3 பேர் கைது

Update: 2023-05-20 18:45 GMT

நல்லம்பள்ளி:

தொப்பூர் அருகே உள்ள கெட்டுப்பட்டி, வெள்ளக்கல் பகுதிகளில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தொப்பூர் போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிகளில் சோதனை செய்தனர். அப்போது மதுப்பாட்டில்களை பதுக்கி விற்ற கெட்டுப்பட்டியை சேர்ந்த மாரியப்பன் (வயது 45), சவுந்தர்யா (40), வெள்ளக்கல் பகுதியை சேர்ந்த ருத்ரமணி (40) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பெண்கள் உள்பட 3 பேரிடம் இருந்து 76 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்