ஏரியூர்:
ஏரியூர் அருகே மூங்கில்மடுவு பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக ஏரியூர் போலீசருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் மூங்கில்மடிவு வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த மூங்கில்மடுவு பகுதியை சேர்ந்த 7 பேரை கைது செய்தனர். மேலும் பலர் தப்பி ஓடியதாக தெரிகிறது. அவர்களிடம் இருந்து ரூ.3 ஆயிரம், 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.