ஆயுதங்களுடன் இருந்த 7 பேர் கைது
ஆயுதங்களுடன் இருந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
கமுதி, ஆயுதங்களுடன் இருந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வாரச்சந்தை அருகே தனியார் தங்கும் விடுதிகள் உள்ளன. இங்குள்ள ஒரு விடுதியில் இரண்டு அறைகளில் 6 வாலிபர்கள் தங்கி இருந்தனர். அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் இதுகுறித்து கமுதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையில் போலீசார் அந்த விடுதிக்கு சென்று வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் அவர்கள் அண்டியேந்தலை சேர்ந்த சந்தோஷ்(வயது 19), ஓ.கரிசகுளம் திவாகர்(21), கண்ணார்பட்டி முத்துப்பாண்டி(20), பெரிய பள்ளிவாசல் தெரு சகுபர் அலி(20) மற்றும் 15, 16, 17 வயதுடைய சிறுவர்கள் என தெரியவந்தது. அந்த வாலிபர்கள் 2 அரிவாள்கள் வைத்திருந்தனர். அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து அரிவாள்கள் மற்றும் ரூ.37 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.