அத்தனூர் அருகே குட்கா விற்பனை: மளிகை கடைக்காரர் கைது

Update: 2023-04-28 18:45 GMT

வெண்ணந்தூர்:

வெண்ணந்தூர் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அத்தனூர் அருகே உள்ள எம்.ஜி.ஆர். காலனியில் கண்ணையன் (வயது 63) என்பவர் மளிகை கடையில் பதுக்கி வைத்து குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவருடைய கடையில் இருந்து மொத்தம் 296 குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்ணையனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்