நகைக்கடையில் ரூ.18 லட்சம் நகைகளை திருடிய ஊழியர் கைது

நகைக்கடையில் ரூ.18 லட்சம் நகைகளை திருடிய ஊழியர் கைது செய்யப்பட்டார்

Update: 2023-04-25 18:45 GMT

காரைக்குடி

காரைக்குடி செக்காலை பிரதான வீதியில் நகைக்கடை உள்ளது. அந்நிறுவனத்தினர் கடந்த வாரம் நகை மற்றும் பணம் இருப்புகளை சரிபார்த்த போது அவை குறைவாக இருப்பது தெரியவந்தது. அதனையொட்டி மறுநாள் கணக்குகளை சரி பார்ப்பதற்காக அனைத்து ஊழியர்களையும் நிறுவனத்துக்கு வரவழைத்தனர். அப்போது அங்கு பணியாற்றிய திருச்சி மாவட்டம் அய்யம்பாளையத்தை சேர்ந்த சதீஷ் (வயது 48) என்பவர் வரவில்லை. அவரை தொடர்பு கொண்ட போது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. உடனடியாக நிறுவனத்தில் பொது மேலாளர் சந்திரசேகரன் நகை மற்றும் பணம் இருப்பு விவரங்களையும் மற்றும் கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளையும் ஆய்வு மேற்கொண்டபோது, சதீஷ் 51 பவுன் நகைகளையும் ரூ.2 லட்சத்து 90 ஆயிரத்தை திருடியது தெரியவந்தது. திருட்டு போன நகையின் மொத்த மதிப்பு ரூ.18 லட்சம் ஆகும். இதுகுறித்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் வழக்கு பதிவு செய்து சதீஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்