மது விற்றவர் கைது
பள்ளிபாளையம் அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
பள்ளிபாளையம்
பள்ளிபாளையம் ஆவரங்காடு ஜனதா நகர் பகுதியில் அரசு அனுமதி இன்றி மது விற்பனை நடப்பதாக கலெக்டருக்கு புகார் வந்தது. இதையொட்டி திருச்செங்கோடு போலீஸ் துணை சூப்பிரண்டு மகாலட்சுமி தலைமையில் போலீஸ் ஏட்டுகள் சுரேஷ் மற்றும் சீனிவாசன் பள்ளிபாளையம் ஜனதா நகரில் நேற்று சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆவாரங்காடு பகுதியைச் சேர்ந்த மாதேஸ்வரன் (வயது 41) என்பவர் பையில் மதுபாட்டில்களை வைத்துக்கொண்டு விற்பனை செய்தது தெரிவயவந்தது. பின்னர் போலீசார் மாதேஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவரிடம் 21 மதுபாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டன.