பொது இடத்தில் ஆபாசமாக பேசிய இருவர் கைது

Update: 2023-04-08 19:00 GMT

கிருஷ்ணகிரி:

ஊத்தங்கரை மற்றும் தேன்கனிக்கோட்டை போலீசார் ஊத்தங்கரை பாரதிபுரம் மற்றும் தேன்கனிக்கோட்டை தாரு திம்மன்னபள்ளி பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆபாசமாக பேசி கொண்டிருந்த ஊத்தங்கரை பாரதிபுரம் பகுதியை சேர்ந்த கணேசன் (வயது 44), தேன்கனிக்கோட்டை சுரேஷ் (33) ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்ததுடன் அவர்களை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்